தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரூம் போட்டு என்னைத் திட்டினாலும் கவலை இல்லை - டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து - என்ன வாழ்க்கடா

'என்ன வாழ்க்கடா' ஆல்பம் பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது மேடையில் டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து அமர்களப்படுத்தினார்.

f
f

By

Published : Sep 24, 2021, 8:04 AM IST

சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் 'சரிகம..' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'என்ன வாழ்க்கடா' என்னும் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ரக்ஷன், சுனிதா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜி.பி. முத்து கூறுகையில், "இந்தப் பாடலுக்கு நடனமாடியது மகிழ்ச்சியாக உள்ளது. சரிகம கம்பெனிக்காரர்கள் அழைத்து என்னைப் பாடவைத்தார்கள். காட்டில் லெட்டர் படித்துக் கொண்டிருந்தவன் நான்.

நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து

எனக்கு ஆட, பாட தெரியாது வாய் மட்டும்தான் உண்டு. டிக் டாக் போன பிறகு மனசு கஷ்டமாயிடுச்சு. என்னை யார் திட்டினாலும் இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் விட்டுவிடுவேன்.

என்னைத் திட்டுபவர்கள் மாவட்டந்தோறும் ரூம் போட்டு அழைத்துவந்து துப்பினாலும் கவலைப்பட மாட்டேன்" என்று பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் என்ன வாழ்க்கடா பாடலுக்கு, பாடலில் நடனமாடியிருந்த சக நடிகர்களோடு ஜி.பி. முத்துவும் சேர்ந்து மேடையில் நடனமாடி அசத்தினார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் 5: ஒரு வேள இருக்குமோ... ட்ரெண்ட் ஆகும் ஜி.பி. முத்து

ABOUT THE AUTHOR

...view details