தமிழ்நாடு

tamil nadu

36 வயதினிலே சிங்கிள், டைவர்ஸ்... காலம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது - டிடியின் அட்வைஸ்

36 வயதில்தான் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை விவரித்து காணொலி வெளியிட்டு, மற்றவர்களின் காலச் சுழற்சியானது எப்போதும் வேறுபட்டிருப்பதால் உங்களது காலச் சுழற்சியைக் கொண்டாடுகள் என்று அட்வைஸுடன் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் டிவி தொகுப்பாளினி டிடி.

By

Published : Mar 8, 2021, 4:39 PM IST

Published : Mar 8, 2021, 4:39 PM IST

Dhivyadharshini
திவ்யதர்ஷனி

சென்னை: காலம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது என்ற கருத்தை வித்தியாசமாகக் கூறி காணொலி வெளியிட்டு, மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகையும், டிவி தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி.

டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி நடிகையாகவும், குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். இவர் மகளிர் நாள் வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "36 என்று தனது வயதைக் குறிப்பிட்டு சிங்கிள், டைவர்ஸ், இதுவரை குழந்தை இல்லை, எலும்பு நோயால் பாதிப்பு என அனைத்தும் இருந்தும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் மற்றவர்களின் காலச் சுழற்சி வித்தியாசமானது. உங்களது காலச் சுழற்சியைக் கொண்டாடுங்கள். மகளிர் நாள் வாழ்த்துகள்" எனத் தாள்கள் மூலமாக இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மற்றவர்களின் காலச் சுழற்சியானது எப்போதும் வேறுபட்டிருப்பதால் உங்களது காலச் சுழற்சியைக் கொண்டாடுகள். உங்களைத் தோல்வியுற்றவர் என்று எப்போதும் இந்தச் சமூகம் தீர்மானிக்கும் காலச் சுழற்சிக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களது ஸ்டைலில் போராடி வெல்லுங்கள் என்றும் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

டிவி தொடர்கள், திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துவந்த திவ்யதர்ஷினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் தோன்றி ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார்.

2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு கருத்து வேறுபாடு காரணமாக 2017இல் அவரை விவாகரத்து செய்தார். தற்போது தொடர்ந்து தொகுப்பாளினியாகத் தோன்றிவரும் இவர் மகளிர் நாள் வாழ்த்துகளை வித்தியாசமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எழுத்தாளர்களின் தலையாய பணி சமூகப் பிரச்னைகளை எழுதுவதுதான்- இயக்குநர் அமீர்!

ABOUT THE AUTHOR

...view details