தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலியை தாங்கிக்கனும்...போட்டின்னு வந்த நீங்க எதிரி: வெளியான 'எனிமி' ட்ரெய்லர் - எனிமி ட்ரெய்லர்

ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள 'எனிமி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Enemy
Enemy

By

Published : Oct 23, 2021, 8:20 PM IST

'அவன் இவன்' படத்தை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆர்யா - விஷாலுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, தமன் இசை அமைக்க சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, கரோனா இரண்டாவது அலையால் பணிகள் நிறுத்தப்பட்டன. கரோனா பரவல் குறைந்ததையடுத்து, எஞ்சியிருந்த படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில், நிறைவுற்றது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று (அக்23) 'எனிமி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதில் சிறுவயதிலிருந்தே ஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்களாக இருந்து பின் காலசூழ்நிலையால் எதிரிகளாக மாறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பிரகாஷ்ராஜ், "போட்டின்னு வந்த நீங்க இரண்டு பேரும் எதிரி. போட்டி முடிஞ்சதுக்கு அப்பறம் நல்ல நண்பர்கள், வலியை தாங்கிக்கனும் அப்போதான் எதிரியிடம் அத மொத்தமா திருப்பி தர முடியும்" என பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ட்ரெய்லரை பார்க்கும் போதே நிச்சயம் அதிரடி ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என தெரிக்கிறது. 'எனிமி' திரைப்படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது.

ஆனால் அன்றைய தினம் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாவதால் 'எனிமி' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாத்த படத்தால் எழுந்த சிக்கல் - திட்டமிட்டபடி வெளியாகுமா எனிமி?

ABOUT THE AUTHOR

...view details