சென்னை : விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் எனிமி. இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், படத்தின் டீசர் நாளை (ஜூலை 24) மாலை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனிமி டீசர் தேதி அறிவிப்பு! - Enemy
ஆர்யா, விஷால் இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Enemy teaser date announced
முன்னதாக, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்!