தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2021, 3:50 PM IST

ETV Bharat / sitara

Enemy: விஷால் vs ஆர்யா மோதல் மீண்டும் ஆரம்பம்

சென்னை: விஷால், ஆர்யா நடித்துவரும் எனிமி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜூலை 9ஆம் தேதி தொடங்கவிருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

dfas
dfas

விஷால், ஆர்யாவை வைத்து இயக்குநர் ஆனந்த் சங்கர் 'எனிமி' என்ற படத்தை இயக்கிவருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு இறுத்திக்கட்டத்தை நெருங்கியபோது, கரோனாவின் இரண்டாவது அலையால் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது கரோனாவின் இரண்டாம் அலை குறைந்துவருவதையடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அந்தவகையில், எனிமி படத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஹைதராபாத்தில் ஜூலை 9ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 8 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பாடல் காட்சி, எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்கலாமே:மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!

ABOUT THE AUTHOR

...view details