சென்னை: ராஜ்கிரண் தயாரித்து, நடித்த 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரித்து, நடித்து வெளியான படம் 'என் ராசாவின் மனசிலே'. இந்தப் படத்தில் கதாநாயகியாக மீனா நடித்திருந்தார். வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகராக நடித்திருந்தார்.
வெள்ளி விழா
படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையில் படத்தில் இடம்பிடித்த அனைத்துப் பாடல்களும் பட்டிthதொட்டி எங்கும் ஒலித்ததுடன், படமும் வெள்ளிவிழா கண்டது.
இதையடுத்து 'என் ராசாவின் மனசிலே' வெளியாகி ஏப்ரல் 13ஆம் தேதியுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம்
இதுகுறித்து படத்தில் கதாநாயகனாக நடித்த ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில், ”இறை அருளால், "என் ராசாவின் மனசிலே" 30 ஆண்டுகள் நிறைவுற்றது. 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகத்தை, என் மகன் நைனார் முஹம்மது எழுதி, இயக்குகிறார்.
கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இறை அருளால், இப்படமும் மாபெரும் வெற்றியடைய, உங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். என்று கூறினார்.
இதையும் படிங்க: கர்ணன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி!