ராப் பாடகர் எமினெம் என்பவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக அவர் வெளியிடும் பாடல்கள் உங்களை மோட்டிவேட் செய்யவில்லை என்றால், யாராலும் உங்களை மோட்டிவேட் செய்ய முடியாது என்ற அளவிற்கு, அவரின் பாடல் வரிகள் தோன்றும்.
யூ-டியூப் தளத்தில் 7 மில்லியன் வியூஸ் கடந்த ராப் பாடகர் எமினெம் பாடல்! - adventures of moon man and slim shady
ராப் பாடகர் எமினெம் பாடியுள்ள பாடல் யூ-டியூப் தளத்தில் 7 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை செய்துள்ளது.
Eminam
இந்நிலையில், எமினெம் தற்போது, எரேஸ் மீ பாடகர் கிட் குட்டியுடன் இணைந்து 'The Adventures of Moon Man and Slim Shady' என்ற பாடலை உருவாக்கி யூ-டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை சம்பவத்தையும், மாஸ்க் அணியாமல் மக்கள் வெளியில் நடமாடுவது குறித்தும் ராப் மூலம் பாடி அசத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியான இப்பாடல் தற்போது வரை யூ-டியூப் தளத்தில் 7 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை செய்துள்ளது.