’ஹெர்குலஸ்’ , ’பே வாட்ச்’ , ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ , ’ஜூமான்ஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றி, பெரு வாரியான குழந்தைகளையும், இளைஞர்களையும் ரசிகர்களாகக் கொண்டிருப்பவர், பிரபல நடிகர் ட்வெய்ன் ஜான்சன்.
இவரும் நடிகை எமிலி ப்ளண்டும் இணைந்து நடித்த டிஸ்னியின் ’ஜங்கிள் க்ரூஸ்’ (Jungle Cruise) திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
’பால் அண்ட் செய்ன்’ (Ball and Chain) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், ஒரு சூப்பர் ஹீரோ பாணி திரைப்படம் ஆகும். இதே பெயரில் வெளிவந்த ஸ்காட் லாட்பெல் என்பவரின் காமிக்ஸ் புத்தகத்தின் தழுவலான இந்தப் படத்தின் கதையில், ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எமிலி வி கோர்டன் முக்கியப் பங்காற்றி உள்ளார்.