தெலுங்கில் உருவாகிவரும் 'ஸ்ஸ்ட் ஸ்டோரிஸ்' வெப்சீரிஸ் தொடரில் தனது லுக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா.
இந்தியில் சக்கைபோடு போட்ட இந்தத் தொடரில் நான்கு வித்தியாசமான கதைகளை கொண்டதாக அமைந்திருந்தது. இந்தத் தொடர் தற்போது தெலுங்கிலும் உருவாகி வரும் நிலையில், 'ஒத்திகையின்போது' என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தெலுங்கு சினிமா நடிகை ஈஷா ரெப்பா.
சங்கல்ப் ரெட்டி, நந்தினி ரெட்டி, சந்தீப் ரெட்டி, தருண் பஸ்கர் என நான்கு இயக்குநர் தொடரில் இடம்பெறும் நான்கு கதைகளை, ஆளுக்கொருவர் என இயக்குகிறார்கள்.
இதையடுத்து சங்கல்ப் ரெட்டி இயக்கும் பகுதியில் தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.