தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கும் எடிட்டர் லெனினுக்கும் ஒரே வயது! - Latest cinema news

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க எடிட்டர் பி.லெனின் தனது 74 வயதில் நுழைந்துள்ளார்.

லெனின்
லெனின்

By

Published : Aug 16, 2020, 5:39 PM IST

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க எடிட்டர் பி.லெனின் கடந்த 1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார். தற்போது தனது 74ஆவது வயதில் நுழைந்துள்ள அவர் இன்றும் உற்சாகத்தோடும் புதிய சிந்தனையோடும் ’கட்டில்’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

லெனின் குறித்து கட்டில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கணேஷ் பாபு கூறுகையில், "நமக்கு முந்தைய தலைமுறையிலிருந்த இயக்குநர் பீம்சிங் எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி படங்கள் எடுப்பது வழக்கம். அவரின் மகனான பி.லெனின் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு, அதே நாளில் பிறந்திருக்கிறார் என்ற செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் படங்களிலும், இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்தனம், ஷங்கர் போன்ற சிறந்த இயக்குநர்களோடும் எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில படங்களையும் இயக்கிய லெனின், இதுவரை ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கர் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், இந்திய தேசிய விருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர்.

இன்றும் நவீன சிந்தனைகளோடு, தொழில்நுட்பத்தையும் இணைத்து திரைத்துறையில் புதிய வழிகாட்டுதலை ஆர்வமிக்க இளைஞர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். புதிதாக திரைத்துறைக்கு வருபவர்கள் இவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details