ராகினி - சஞ்சனாவிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை
பெங்களூரு: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கால்ரானி உள்ளிட்ட 5 பேரிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பாக கன்னடத் திரைக்கலைஞா்கள் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதில், ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், விரேன் கன்னா, நடிகை ராகினி துவிவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பல பெரும் புள்ளிகள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராகினி, சஞ்சனா, விரேன் கன்னா, ராகுல் தோன்ஸ், ரவிசங்கர் ஆகிய ஐந்து பேருக்கு எதிராக பண மோசடி வழக்கு இருப்பதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது.