சென்னை: நூல் வெளியீட்டு விழாக்களில் நாம் அதிகமாக பார்க்க கூடிய கவிஞர்களில் ஒருவர் யுகபாரதி. பொதுவாக தான் கலந்துகொள்ளும் நூல் வெளியீட்டு விழாக்களில் பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிரக்கூடியவர். இவர் தற்போது ஆனந்த் சீனிவாசன் எழுதிய 'பணம் எனும் மந்திரம்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ஆனந்த் சீனிவாசன் எழுதிய `பணம் எனும் மந்திரம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் செந்தில்வேலுடன் கலந்துகொண்டேன்.
பொருளாதாரத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவும், அதைப் பெருக்குவதற்கான வழிகளையும் எளிய மொழியில் ஆனந்த் இந்நூலில் தந்திருக்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பொருளாதாரம் குறித்து பேசுபவர்களில் ஜெயரஞ்சன்,ஜோதிசிவஞானம், ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மற்றவர்களும் பேசுகிறார்கள். என்றாலும், மக்கள் மொழியில் மக்களின் சார்பாக பேசுவதில் இவர்கள் மூவருமே என்னைக் கவர்ந்தவர்கள்.
விழாவில் ஆனந்த எழுதிய ஆங்கில நூலான all about mutual fund எனும் நூலை திருமிகு. ஜெயரஞ்சன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.