இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'எக்கோ'. அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகும் இதில் நடிகர் ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், திஷா பாண்டே, காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று (அக்.06) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதுகுறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில், 'எக்கோ' திரைப்படம் த்ரில்லர் மிஸ்ட்ரி பாணியில் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (அக்.06) முதல் தொடங்கியுள்ளது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அரசு கூறிய அனைத்து பாதுகாப்பு முறைகளையும், முறையாகக் கையாண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளோம். இந்தப் படம் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கக்கூடிய ஒரு கதை. கண்டிப்பாக திரையரங்கில் இது ஒரு தரமான படமாக வெளிவரும்” என்று கூறினார்.
பூஜையுடன் தொடங்கிய 'எக்கோ' படப்பிடிப்பு தொடர்ந்து பேசிய நடிகை வித்யா பிரதீப், “எக்கோ படம் மிகவும் சுவாரசியமான த்ரில்லர் கதை. ஒரு அருமையான குழுவுடன் பணியாற்றி வருகிறேன். ஒளிப்பதிவாளர் கோபிநாத் உடன் நான் ஏற்கெனவே பணிபுரிந்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் பணிபுரிகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ஆர்.ஆர்.ஆர் படக்குழு