தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனாவை வென்று மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பிய ’தி ராக்’! - தி ராக் நடிகர்

கரோனாவிலிருந்து மீண்டு படப்பிடிப்புப் பணிக்குத் திரும்பியுள்ள டுவைன் ஜான்சன், தான் படப்பிடிப்பில் பாதுகாப்பாக பணிபுரிவதைக் குறிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டுவைன் ஜான்சன்
டுவைன் ஜான்சன்

By

Published : Sep 20, 2020, 12:16 PM IST

பிரபல குத்துச் சண்டை வீரரும் ஹாலிவுட் நட்சத்திரமுமான ’தி ராக்’ எனப்படும் டுவைன் ஜான்சன், விரைவில் வெளிவரவிருக்கும் தனது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான ’ரெட் நோட்டீஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக டுவைன் ஜான்சன், அவரது மனைவி லாரென், இரு மகள்கள் என அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது முழுவதுமாக அவர் கரோனாவிலிருந்து மீண்டு, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் கடுமையான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படப்பிடிப்பில், தான் ஃபேஸ் ஷீல்டுடன் கூடிய முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள டுவைன் ஜான்சன், ”இந்த உலகம் மாறிவிட்டது. எனவே எங்களது செயல்முறைகளும் மாறிவிட்டன. நாங்கள் ’ரெட் நோட்டீஸ்’ படப்பிடிப்புப் பணிகளை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளோம். இது மிகவும் பயனுள்ள முதல் வாரம், கவலையும் பதற்றமும் இல்லாமல் இல்லை. ஆனால் எங்களது ஒட்டுமொத்த அற்புதமானக் குழுவினரும் கவனம் செலுத்தி, சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் பணிபுரிந்து வருவதாகவும் டுவைன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கான் மேன் குறித்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் ரெட் நோட்டீஸ் திரைப்படத்தில், ரியான் ரெனால்ட்ஸ், கால் கடோட் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :கிராமி விருதின் மீது சிறுநீர் கழித்த பாப் இசை பாடகர்

ABOUT THE AUTHOR

...view details