தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீண்டநாள் காதலியை மணம் முடித்த ராக்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகரான டுவைன் ஜான்சன் (ராக்) தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

dwayne johnson

By

Published : Aug 20, 2019, 4:36 AM IST

Updated : Aug 20, 2019, 10:39 AM IST

அமெரிக்காவில் மல்யுத்த (wrestling) போட்டிகள் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன். இவர் பின்னாளில் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2001ஆம் ஆண்டு முதன்முறையாக 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அதில், தி ஸ்கார்ப்பியன் கிங், தி கேம் பிளான், ஜி.ஐ.ஜோ, ரேஸ் டூ விட்ச் மவுண்டெயின் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில், ஹாப்ஸ் என்ற போலீஸ் அதிகாரியாக தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற படம் வெளியானது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இவர் தனது நீண்டநாள் காதலியான லாரன் ஹாசியன் என்ற பாடகியை திருமணம் செய்துள்ளார். இந்தத் தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஹவாய் தீவில் நடைபெற்ற இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு நெருங்கிய சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

டுவைன் ஜான்சன் தனது மனைவி லாரன் ஹாசியனுடன்

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் லாரனும், டுவைன் ஜான்சனும் டேட்டிங் செய்துவருகின்றனர். அவர்களுக்கு ஜாஸ்மின், டியானா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே திருமணமான டுவைன் ஜான்சன், கடந்த 2007ஆம் ஆண்டு தனது முதல் மனைவி டேனி கிரேசியாவை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 20, 2019, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details