ப்ளாக் ஆடம் (Black Adam) திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் ட்வெய்ன் ஜான்சன் பகிர்ந்துள்ளார்.
புகழ்பெற்ற டிசி காமிக்ஸின் ஆன்ட்டி - ஹீரோ கதாபாத்திரம் ‘ப்ளாக் ஆடம்’. இந்த கதாபாத்திரத்தின் கதை தற்போது படமாகி வருகிறது. ட்வெய்ன் ஜான்சன் (ராக்) இதில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தனது அனுபவம் குறித்து ராக் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ப்ளாக் ஆடம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது என் வாழ்வில் மறக்க முடியாத பயணம். மனதளவிலும் உடலளவிலும் இந்தப் படத்துக்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் செலவு செய்த ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாக இருந்தது. என்னோடு இணைந்து பணியாற்றிய கலைஞர்கள், இயக்குநர் ஜாமே காலெட் செர்ரா அனைவருக்கும் நன்றி. டிசி உலகின் அதிகாரப் படிநிலை மாறப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஜாமே காலெட் செர்ரா, ராக்கை வைத்து ‘ஜங்கிள் க்ரூஸ்’ எனும் படத்தை இயக்கியவர். ‘ப்ளாக் ஆடம்’ இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும்.
இதையும் படிங்க:தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ‘வாடிவாசல்’