திண்டுக்கல்லில் இருந்து திரைத்துறையில் நுழைந்த இவருக்கு வெற்றி அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. திரைத்துறையில் ஏழு வருட போராட்டத்திற்கு பிறகு அவரது திறமை இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து நடிகை துஷாரா விஜயன், ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுக்கு, நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இது போன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் நான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது சார்பட்டா படத்தில் நடந்துள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்ட ‘சார்பட்டா’ மாரியம்மா - dushara vijayan
சார்பட்டா பரம்பரை படத்தில் துணிச்சல் மிகு நாயகி மாரியம்மாளாக கலக்கிய துஷார விஜயன், மக்கள் போகுமிடமெல்லாம் மாரியம்மாவாக தன்னை கொண்டாடுவதை கண்டு உற்சாகத்தில் திளைத்துள்ளார்.
![ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்ட ‘சார்பட்டா’ மாரியம்மா Dushara vijayan happy on sarpatta](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12640412-449-12640412-1627817660358.jpg)
ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். நான் அவரை பற்றி வெளியில் கேள்விப்பட்டதற்கு முற்றிலும் மாறாக இருந்தார். அவர் மிகவும் கலகப்பாக இருப்பவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருடனும் சேர்ந்து பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனெனில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடம் இருந்து விலகியே இருக்கும். அதற்காக தான் அப்படி இருந்தார் என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
இயக்குநர் ரஞ்சித் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால், அவருடைய கபிலன் கதாபாத்திரத்தை விட்டு சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னை பார்த்துக் கொண்டார். அவரின் உழைப்பு பிரமிப்பானது. அனைவரும் மாரியம்மாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.
இதையும் படிங்க:29 Years Of Ajithism: மலேசியா தல ரசிகர்கள் கொண்டாட்டம்!