நடிகர் துல்கர் சல்மானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ், எம். ஸ்டார் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் மீண்டும் துல்கர் உடன் இணையும் படம் 'குருப்'. ஷோபிதா துலிப்பாலா நாயகியாக நடித்திருக்கும் 'குருப்' படத்தில் இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, விஜயராகவன், பி.பாலசந்தரன், சுரபி லட்சுமி, சிவாஜித் பத்மநாபன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சுகுமார் குருப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. துல்கர் சல்மான் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.