தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

துல்கர் பிறந்தநாள் ட்ரீட்- புதிய போஸ்டர் வெளியீடு - துல்கர் சல்மான் போஸ்டர் வெளியீடு

துல்கர் சல்மானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Dulquer Salmaan new movie poster release
Dulquer Salmaan new movie poster release

By

Published : Jul 28, 2020, 9:01 PM IST

வைஜெயந்தி சினிமாஸ், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. 1964ஆம் ஆண்டில் நடைபெறும் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

தற்போது துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார். அதில் இரண்டு கைகள் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது.

வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

போஸ்டர் வெளியீடு

இந்திய சினிமாவில் 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இதுதவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் துல்கர் சல்மான் படமும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க... மேடையில் கண் கலங்கிய துல்கர் சல்மான்!

ABOUT THE AUTHOR

...view details