துல்கர் சல்மான், சோனம் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி சோயா ஃபேக்டர்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எதிர்பார்த்த அளவு இல்லை. தோல்விகளை கண்டு மனமுடையாமல் அடுத்தடுத்து புதிய முயற்சிகளை செய்து வெற்றி நாயகனாக பயணிப்பவர் துல்கர் சல்மான். ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கம்மட்டிப்பாடம்’, ‘சார்லி’, ‘ஓ காதல் கண்மணி’, என பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார். இந்நிலையில் தனது தந்தை மம்மூட்டி வழங்கிய அறிவுரை பற்றி துல்கர் சல்மான் தற்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
'அப்பா சொல்லித் தந்த பாடம் இதுதான்' - மனம் திறந்த துல்கர் சல்மான்! - துல்கர் சல்மான்
மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகனாகத் திகழும் துல்கர் சல்மான், தனது தந்தை மெகா ஸ்டார் மம்மூட்டி கூறிய அறிவுரை பற்றி மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து துல்கர், ’எந்த விஷயத்தையும் என் தந்தை துணிந்து செய்யச் சொல்வார். உனக்கு உணவு, உடை, இருப்பிடம் பற்றிய கவலை இல்லை. அதனால் நீ வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய். தவறுகள் செய்யாவிட்டால் தனிப்பட்ட முறையிலோ அல்லது கலைஞனாகவோ உன்னை வளர்த்துக்கொள்ள முடியாது என அவர் அடிக்கடி சொல்லுவார். ஒரு படம் தோல்வியுற்றால் நான் தெருவுக்கு வந்துவிடப் போவதில்லை. அதனால் திரைத்துறையில் நான் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. என் தந்தை பிடிவாதக்காரர். திரைத்துறை தொழிலில் எனக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.