'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'ஹே சினாமிகா'. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் இதில் காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் போஸ்டரில் துல்கர் சல்மான் மிகவும் கூலான நபர் போல் இருப்பதால், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் போல் 'ஹே சினாமிகா' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், இந்தி,கன்னடம், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியான 'குருப்' படம் உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:என் படத்தில் வேலைப்பார்த்தா வாய்ப்பு கிடையாதா - பா. இரஞ்சித்