நடனப் பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் ஆகியவை வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.