தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'திரௌபதி' ஷீலா ராஜ்குமாரை பாராட்டிய 'மாயத்திரை' படக்குழு - திரெளபதி ஷீலா ராஜ்குமார்

'திரெளபதி' படத்தில் ஷீலா ராஜ்குமார் சிறப்பாக நடித்தற்காக மாயத்திரை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டியுள்ளனர்.

sheela rajkumar
sheela rajkumar

By

Published : Mar 1, 2020, 3:34 PM IST

'திரெளபதி' படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ஷீலா ராஜ்குமார், தற்போது அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கி வரும் மாயத்திரை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் நாயகனாக 'முருகா', 'கோழி கூவுது' உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக்குமார் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

இப்படத்தை ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் தயாரிக்கின்றன.

ஷீலா ராஜ்குமாரை பாரட்டும் மாயத்திரை படக்குழுவினர்

இந்நிலையில், 'திரெளபதி' படத்தில், ஷீலா ராஜ்குமார் நன்றாக நடித்தற்காக மாயத்திரை படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரை பாரட்டும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தின் இயக்குநர் சம்பத்குமார் இயக்குநர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணி புரிந்தவர்.

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் இயக்குநர் மோகன் இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'திரௌபதி'. இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லரில் குறிப்பிட்ட கட்சித் தலைவர், குறிப்பிட்ட சமூக இளைஞர்களை தவறாகச் சித்தரிப்பது போன்றும், சாதியைத் தூக்கிப் பிடிக்கும் வண்ணமும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருப்தாக கூறி படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன.

மாயத்திரை படக்குழுவினருடன் ஷீலா ராஜ்குமார்

மேலும் இப்படத்தை வெளியிடக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகமும் விடுதலை சிறுத்தைக்கட்சியினரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். இருப்பினும் இப்படம் பிப்.28 வெள்ளி கிழமை வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் வாசிங்க: ’ஒவ்வொரு பெண்ணும் திரெளபதியாக வாழ வேண்டும்’ - ஹெச்.ராஜா

ABOUT THE AUTHOR

...view details