சென்னை:தமிழ்நாடு அரசு சார்பில் திரைத் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
இசை, நாட்டியம், திரைப்படம் ஆகிய மூன்று கலைப்பிரிவுகளில் ஒரு கலைப்பிரிவுக்கு, ஒரு பெண் கலைஞர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக அறிவித்த அரசு, பி. சுசீலாவிற்கு இந்த விருதினை அறிவித்தது.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், மருத்துவர்கள் அறிவுரையின்படியும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பி. சுசீலா கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, இயல், இசை, நாடக மன்றத்தின் அலுவலர் ஹேமநாதன் சுசீலாவின் வீட்டிற்குச் சென்று புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதையும், பொற்பதக்கமும் வழங்கினார்.
விருதினைப் பெற்றுக்கொள்ளும் பி .சுசீலா அதனை இவர் இன்முகத்துடன் பார்க்கும் புகைப்படம் அவரது ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.