தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமை படம் குறித்து ’டபுள் அப்டேட்’ : ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்! - valimai Movie Motion Poster

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை
வலிமை

By

Published : Jul 1, 2021, 1:13 PM IST

எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வலிமை’. இத்திரைப்படத்தை மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இதில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக கரோனா ஊரடங்கை அடுத்து படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வராத நிலையில், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் ஏராளமான அலப்பறைகள் செய்து வந்தனர். ரசிகர்களின் இந்தச் செயலை கண்டித்து நடிகர் அஜித் சில நாள்களுக்கு முன்னர் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

மற்றொருபுறம் அப்டேட் கேட்டு காத்துக் கிடந்த அஜித் ரசிகர்களை கலாய்த்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி கதற விட்டனர் பிற நடிகர்களின் ரசிகர்கள்.

இந்நிலையில், கவலையில் இருந்து வந்த அஜித் ரசிகர்களை தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தும்படியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ’வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:விஜய்யின் ’பீஸ்ட்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details