'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் நடித்துவருகிறார். இதனை அறிமுக இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கிவருகிறார்.
பிரியங்கா மோகன், யோகிபாபு, சூரி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துவருகிறார்.
'டான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.