நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. இதனையடுத்து அவர் அறிமுக இயக்குநர் சி.பி. சக்கரவர்த்தி இயக்கிவரும், 'டான்' படத்தில் நடித்துவருகிறார். இதில் பிரியங்கா மோகன், யோகிபாபு, சூரி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்துவருகிறார். 'டான்' படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது, 'டான்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நாளை (ஆக. 6) தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.