தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் விஜய், எந்த ஒரு சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவது இல்லை. ஆனால் அவர் பெயரில் உள்ள கணக்கை அவர் தரப்பில் உள்ள, பிஆர்ஓ பயன்படுத்திவருகிறார்.
இதற்கிடையில் சமீப காலமாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அவரது மகள் திவ்யா சாஷா இருவரின் பெயரில் ட்விட்டர் கணக்குகள் உலாவருகின்றன. இதனை நம்பி பலரும் அந்தக் கணக்குகளைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.