தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னது சாக்‌ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள் - சாக்‌ஷி அகர்வால் படங்கள்

சென்னை: நடிகை சாக்‌ஷி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சாக்‌ஷி
சாக்‌ஷி

By

Published : Jun 14, 2021, 1:13 PM IST

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் வரிசையாகப் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி போட்டோ ஷூட் புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார்.

என்னது சாக்‌ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
அந்தவகையில் சாக்‌ஷி திருமண கோலத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், ‘புதிய நாள், புதிய லுக், புதிய தொடக்கம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், என்னது சாக்‌ஷிக்கு திருமணம் ஆயிடுச்சா என அதிர்ச்சியில் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் ஹேஷ் டாக்கில் இது விளம்பரப் புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தார், அதை ரசிகர்கள் பார்க்காமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details