'கோலமாவு கோகிலா' பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரியா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
டாக்டர் ட்ரெய்லர் - வெளியானது அப்டேட் - doctor trailer
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ’டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மூலம் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (செப்.25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் படக்குழு டாக்டர் படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.