நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படம் இம்மாதம் 9ஆம் தேதி வெளியானது. பிரியங்கா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.கே. புரொடக்ஷனுடன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான டாக்டர் படத்தை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ரசித்துவருகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கும், பிரியங்காவிற்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறி நாயகி திருமணத்தை நிறுத்துகிறார். இந்தச் சூழ்நிலையில் பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல்போக, சிவகார்த்திகேயன் அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வெளியாகி 10 நாள்களில் 51 கோடி ரூபாய் வசூல்செய்து சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த வாரம் அரண்மனை 3 படம் வெளியானாலும், டாக்டர் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:BB Day 14: எதிர்பார்த்த முதல் எலிமினேஷன்... கமலை ஏமாற்றிய அபிஷேக்