தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மின்சாரக் கட்டணத்தைப் பார்த்து அதிர்ந்துபோன பிரபல நடிகை - Latest cinema news

பாலிவுட் நடிகை திவ்யா தத்தா தனது வீட்டிற்கு ரூ.5000க்கு மேல் மின்சாரக் கட்டணத் தொகை வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Divya
Divya

By

Published : Jul 27, 2020, 11:42 AM IST

கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பது ஒருபக்கம் இருக்க, மின் கட்டணம் எடுக்காமல் மின் வாரியம் அனுப்பும் கட்டணத் தொகையை பார்த்து பிரபலங்கள் அதிர்ச்சி அடைகின்றனர். பிரசன்னா, காலா பட நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட சிலரும் இதில் அடங்கும்.

அந்த வகையில், நடிகை திவ்யா தத்தா வீட்டில் இந்த மாதம் மின் கட்டணத் தொகை ரூ.51 ஆயிரம் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா ஊரடங்கில் மின்சார நிறுவனம் அளித்த பரிசா இது? 51,000 ரூபாய் மின் கட்டணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஒரு லைட், ஒரு ஃபேன்: ரூ.1.25 லட்சம் கரண்ட் பில்; அதிர்ந்துபோன பெண்மணி!

ABOUT THE AUTHOR

...view details