மார்வெல், ஃபாக்ஸ் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களை டிஸ்னி நிறுவனம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வாங்கியது. இந்நிலையில் மார்வெலின் பெயரிடப்படாத புதிய சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனம் நடத்தவுள்ளது. கதைபடி இந்த திரைப்படத்தின் நாயகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆசிய வம்சாவளி என்று கூறப்படுகிறது.
டிஸ்னிக்கு ரூ.120 கோடி மானியம் வழங்கும் ஆஸ்திரேலிய அரசு
கான்பரா: மார்வெலின் அடுத்த சூப்பர் ஹீரோ படத்தின் படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்காக ரூ.120 கோடியை டிஸ்னிக்கு மானியமாக அந்நாட்டு அரசு வழங்கவுள்ளது.
டிஷ்னிக்கு 120 கோடி
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திரைப்படங்களின் படப்பிடிப்பை தங்கள் நாட்டில் நடத்தினால் மானியம் வழங்கும் ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி மார்வெலின் புதிய பெயரிடப்படாத சூப்பர் ஹீரோ திரைப்படத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபாக்ஸ் ஸ்டுடியோவில் நடத்தவுள்ளதால், அந்நாட்டு அரசு ரூ.120 கோடி மதிப்பிலான மானியத்தை டிஸ்னிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.