தி ஹாலிவுட் ரிப்போர்டர் அளித்துள்ள தகவலின்படி, ஸ்கர்லெட் ஜொஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள மார்வெல் திரைப்படமான ‘ப்ளாக் விடோ’ நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது அதன் வெளியீடு 2021 மே 7ஆம் தேதிக்கு டிஸ்னி தள்ளிவைத்துள்ளது.
கரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிப்போன ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தின் வெளியீடு! - hollywood films release pushed
கரோனா சூழல் காரணமாக டிஸ்னியின் ‘ப்ளாக் விடோ’ மற்றும் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

West Side Story
அதேபோல், மார்வெல்லின் ஷாங்-ச்சி & தி லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ் திரைப்படம் மே 7 வெளியாகவிருந்தது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
20 செஞ்சுரி தயாரிப்பில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு தள்ளிப்போயிருக்கிறது. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம், 2021 டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.