தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!

மும்பை: டிஸ்னி நிறுவனம் இந்தியாவின் பிரபல ஸ்டீரிம்ங் நிறுவனமான ஹாட்ஸ்டாருடன் இணைந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற சேவையை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது.

வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

By

Published : Apr 1, 2020, 9:04 PM IST

இந்தியாவில் மிகப் பிரபலமான ஸ்டீரீமிங் தளமாக விளங்குவது ஹாட்ஸ்டார். கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படுவதால் ஹாட்ஸ்டாருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில், அந்த ரசிகர் பட்டாளத்தைப் பயன்படுத்தி இந்தியச் சந்தைக்குள் நுழைய டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே இருக்கும் ஹாட்ஸ்டார் செயலி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் என்ற பெயரில் புதுப்பொலிவுடன் மாற்றம் பெறவுள்ளது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, விளம்பரங்களுடன் கூடிய மூன்றாவது பேக் என மூன்று வகையான பேக்குகளை பயனாளர்கள் தேர்வு செய்யலாம். டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி என்பது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிராந்திய மொழிகளில் திரைப்படங்களை உள்ளடக்கியது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம், பேக்கில் ஹாட்ஸ்டார் விஐபி பேக்கில் வரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இணைந்து ஆங்கில மொழித் திரைப்படங்களும் டிஸ்னியின் பிரத்யேக 29 படைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹாட்ஸ்டாரில் உள்ளவர்களுக்கு இந்தப் புதியத் திட்டத்திற்கு இலவசமாக அப்கிரேட் செய்யப்படுவார்கள் என்றும், டிஸ்னி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இணையப் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், டிஸ்னி இந்தியச் சந்தைக்குள் நுழைந்துள்ளதால் எளிதில் அது இந்தியச் சந்தையைக் கைப்பற்றும் என்றே கருதப்படுகிறது.

இதையும் படிங்க:ஓ இதான் டைரக்டர் கட்டா...தனது மகனுக்கு தானே முடி வெட்டிய இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details