தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வரிசைகட்டி நிற்கும் மார்வெல் ரிலீஸ்... உற்சாகத்தில் ரசிகர்கள்! - loki

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோக்களைக் கொண்ட மார்வெல் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தனது ரிலீஸ் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மார்வல்

By

Published : Jul 21, 2019, 7:07 PM IST

உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் நிறுவனமான மார்வெலின் சமீப படைப்புகள் அமெரிக்காவைத் தாண்டியும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமீபத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்', 'ஸ்பைடர் மேன்: அவே ஃப்ரம் தி ஹோம்' திரைப்படங்களுக்கு இந்திய ரசிகர்கள் அளித்த வரவேற்பே அதற்கு சாட்சி.

இந்நிலையில் மார்வெல் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தனது ரிலீஸ் அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மார்வெல் எண்ட் கேம் திரைப்படத்தில் உயிரிழந்த 'ஃப்ளாக் விடோ' கதாபாத்திரத்தின் தனித் திரைப்படமான 'ஃப்ளாக் விடோ' திரைப்படம் 2020 மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

ஃப்ளாக் விடோ

மேலும் ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் உருவாகிவரும் 'எட்டர்னல்ஸ்' திரைப்படம், 2020 நவம்பர் 6ஆம் தேதியும், 'ஷாங்க்-ச்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்' திரைப்படம் 2021 பிப்ரவரி 12ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகமான 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வேர்ல்ட் மேட்னெஸ்' திரைப்படம் 2021 மே 7ஆம் தேதியும், 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் 2021 நவம்பர் 5ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்கி

அதேபோல 'தி ஃபால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' தொடர் 2020ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. மேலும் தோர் சகோதரனான லோக்கியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுவரும் 'லோக்கி' மற்றும் 'வான்டா விசன்', 'ஹாக் ஐ', 'வாட் இப்' ஆகிய வெப் சீரிஸ்கள் 2021ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details