மார்வெல்லின் ‘பிளாக் பேந்தர்’ படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் சாட்விக் போஸ்மேன், புற்றுநோய் காரணமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
'வகாண்டா' அரசருக்காக டைட்டில் கிரெடிட்ஸை மாற்றிய மார்வெல்! - சாட்விக் போஸ்மேனை கெளரவப்படுத்தய மார்வெல் நிறுவனம்
வாசிங்டன்: மார்வெல் நிறுவனத்தைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனை டிஸ்னி+ ஓடிடி தளம் கெளரவப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மார்வெல் நிறுவனம் சாட்விக் போஸ்மேனுக்காக புதிய டைட்டில் கிரெடிட்ஸ் ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளிட்டுள்ளது. வழக்கமாக மார்வெல் படங்களின் தொடக்கத்தில் வரும் இந்த டைட்டில் கிரெட்டிஸில் மார்வெல் சூப்பர் ஹீரோக்களான, கேப்டன் அமெரிக்கா, அயன்மேன், தோர், ஹல்க் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும். தற்போது சாட்விக் போஸ்மேனை கெளரவிக்கும்வகையில் இந்த டைட்டில் கிரெடிட்ஸில் சாட்விக் போஸ்மேனின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் மார்வெல் நிறுவனத்தின் முக்கியத் தலைவரான ஸ்டான் லீ மறைவின்போது டைட்டில் கிரெட்டிஸில் அவரது படங்களைப் பயன்படுத்தி 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது சாட்விக் போஸ்மேனின் டைட்டில் கிரெடிட்ஸை டிஸ்னி+ ஓடிடிதளம் ‘பிளாக் பேந்தர்’ படத்திற்கு முன்பு பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.