ஆதித்யா ராய் கபூர், திஷா பதானி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ’மலங்’. ஆக்ஷனுடன்கூடிய திகில் படமாக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் ’சர் கர் சலேன்’ எனும் பாடலை படத்தின் கதாநாயகியான திஷா பதானி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மூன்று நிமிடங்கள் ஏழு விநாடிகளைக் கொண்ட இந்தப் பாடலில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பதானி இடையிலான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான அர்ஜித் சிங் பாடியிருக்கும் இப்பாடலை சயத் குரேஷி எழுதியுள்ளார்.