நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி தொலைக்காட்சியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கிடையில் நேற்று டிஸ்கவரி தொலைக்காட்சியில், 'இது ஒரு மாஸ்னா கொண்டாட்டம். சவால் எடுத்து கொண்டு பார்ட்டியில் கலந்து கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்து உங்களது நடனத்தை #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ் டேக் குறிப்பிட்டு பதிவிடுங்கள்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.