தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்த புஷ்கர், காயத்ரி தயாரிப்பு நிறுவனம் - தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்த புஷ்கர் காயத்ரி

இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனமும், அமேசான் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸின் படப்பிடிப்பு, கரோனா காரணமாக தடைப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இரு தயாரிப்பு நிறுவனங்களும் மாதச் சம்பளம் வழங்கியுள்ளன.

pushkar gayathri production gives salary to workers
pushkar gayathri production gives salary to workers

By

Published : Jun 27, 2020, 3:47 PM IST

இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ், அமேசான் இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு உதகை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா தொற்று ஊரடங்கில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் தொடர்ந்து நான்கு ஐந்து மாதங்கள் படப்பிடிப்பு வேலையில்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளபட்டார்கள்.

அவர்களுக்கு, நிவாரண உதவிகளை சினிமா சங்கங்கள் செய்துவந்தாலும் பணப் பற்றாக்குறை பலருக்கும் இருந்துவந்தது. இதையடுத்து அமேசான், வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தங்களது படத்தில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதச்சம்பளம் வழங்கியிருக்கின்றன.

இந்த கரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் பணம் வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இப்படி வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்தவர்களுக்கு உதவி செய்த பட நிறுவனத்தினரை தொழிலாளர்கள் நெகிழ்ந்து பாராட்டிவருகின்றனர்.

நன்றி தெரிவித்த தொழிலாளர்

இதையும் படிங்க...இந்தியில் ரீமேக்காகும் 'விக்ரம் வேதா'!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details