தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்! - Latest cinema news

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.

Kannada actor rajkumar
Kannada actor rajkumar

By

Published : Jul 12, 2020, 1:24 PM IST

தமிழில் 'கோலி சோடா', 'கடுகு' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர், விஜய் மில்டன். இவர் தற்போது கன்னடத் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஆம்... கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிவ ராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்ஜெயா இணைந்து நடிக்கும் படத்தை விஜய் மில்டன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கெனவே சிவ ராஜ்குமார், டாலி தனஞ்ஜெயா இருவரும் இணைந்து நடித்த 'டகரு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தை கிருஷ்ணா கிரியேஷன்ஸ் நிறுவனமும், விஜய் மில்டனின் ரஃப் நோட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. நடிகர் சிவ ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை நடிகர் சூர்யா இன்று(ஜூலை 12) வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details