விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள 'கொலைகாரன்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தின் வெற்றிதான் அவரை தலை நிமிர வைத்துள்ளது. தொடர் தோல்வி படங்களை கொடுத்துவந்த விஜய் ஆண்டனிக்கு 'கொலைகாரன்' திரைப்படம் நிலையான வெற்றியைப் பெற்று மனநிறைவை தந்துள்ளது என்றே கூறலாம்.
'கோலி சோடா' பட இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி - vijay antony'
'கொலைகாரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
!['கோலி சோடா' பட இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3579974-thumbnail-3x2-vijay.jpg)
இந்நிலையில், 'கொலைகாரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார், கமல் போரா ஆகியோர் தயாரிக்க இருக்கின்றனர். கூட்டு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
தற்போது, இந்தப் படத்தில் நடிக்க நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகின்றன. அக்டோபர் மாதம் முதல் கோவா, டையூ, டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.