தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இனி காவல் துறையையும் மருத்துவர்களையும் கிண்டல் செய்ய முடியாது'- இயக்குநர் விஜய் மில்டன் - director vijay milton corona awareness video

கரோனா தொற்று காரணமாக இயக்குநர் விஜய் மில்டன் தனது குழந்தைகளின் கரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

director vijay milton corona awareness video
director vijay milton corona awareness video

By

Published : Apr 18, 2020, 11:21 AM IST

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் கரோனா விழிப்புணர்வு குறித்து தனது குழந்தைகளை வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக தன் மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு 130 கிமீ சைக்கிளில் அழைத்துச்சென்ற நபர், தன் மகனை 1,400 கி.மீ பயணம் செய்து ஸ்கூட்டியில் கூட்டிவந்த தாய் போன்றவர்களது செய்தி குறித்து தன் குழந்தைகளுடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா விழிப்புணர்வு வீடியோ

மேலும் இதுபோன்ற ஒரு சூழலில் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களையும், காவல் துறையினரையும் இனி சினிமாவில் கிண்டல் செய்து படம் எடுக்கமுடியாது என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சென்னை வெள்ளம், கரோனா தொற்று போன்ற கஷ்ட காலங்களில்தான் நம்முள் இருக்கும் ஹீரோக்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... ஊரடங்கு கேள்வி-பதில்: குழந்தைகளின் வீடியோவை வெளியிட்ட விஜய் மில்டன்

ABOUT THE AUTHOR

...view details