தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் விஜய்க்கு ஆண் குழந்தை - ட்விட்டரில் அறிவித்த நடிகர் உதயா - இயக்குநர் விஜய் தம்பதிக்கு ஆண்குழந்தை

இயக்குநர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது சகோதரரும் நடிகருமான உதயா சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.

vijay
vijay

By

Published : May 30, 2020, 2:55 PM IST

Updated : May 30, 2020, 4:22 PM IST

சினிமா தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இரண்டாவது மகன் இயக்குநர் விஜய். மூத்த மகன் நடிகர் உதயா. அஜித் நடிப்பில் வெளியான 'கீரிடம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். இப்படத்தை தொடர்ந்து 'பொய் சொல்லப் போறோம்', 'மதராசபட்டினம்', 'தெய்வ திருமகள்', 'தலைவா', 'தாண்டவம்', 'சைவம்', 'தியா', 'தேவி', 'வனமகன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர், 2014ஆம் ஆண்டு அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய 'தெய்வதிருமகள்', 'தலைவா' ஆகிய படங்களில் அமலாபால் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்து. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

அதன்பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை வைத்து 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா என்பவரை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.

இதனையடுத்து விஜய்க்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அவரது சகோதரரும் நடிகருமான உதயா தனது ட்விட்டரில் கூறியுள்ளார். அதில், ''சகோதரர் விஜய் - ஐஸ்வர்யா விஜய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நான் பெரியப்பா ஆகிவிட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்று ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட்டையடுத்து திரை பிரபலங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பர்களுடன் வெளிநாட்டு ட்ரிப் - லூட்டி அடித்த விஜய்யின் அன்சீன் பிக்

Last Updated : May 30, 2020, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details