சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
’உங்களுடன் பணியாற்றாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு’ - விக்னேஷ் சிவன்
”நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம். ஆனால் அது இறுதி வரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு” - விவேக் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன்
அந்த வகையில், இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை அழுத்தமாகப் பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.
விஐபி பட நாள்களில் உங்களுடன் பழகிய நினைவுகள் நீங்கள் நட்ட மரங்களைப் போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம். ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே” எனத் தெரவித்துள்ளார்.