தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமீருடன் இணைந்த வெற்றிமாறன்: நாயகன் யார் தெரியுமா? - Director Vetrimaran will write the dialogue

நடிகர் சூரியை வைத்து அமீர் இயக்கும் படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் வசனம் எழுதவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Director Vetrimaran will write the dialogue
அமீருடன் இணைந்த வெற்றிமாறன்

By

Published : Feb 2, 2022, 2:59 PM IST

சென்னை: இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்து திறமைமிகு இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அமீர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தை இயக்கியிருந்தார். நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய சந்தனத்தேவன் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார், அமீர்.

அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் புதிய படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

அமீருடன் இணைந்த வெற்றிமாறன்

இந்நிலையில், வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்தப் படத்திலும் நடிகர் சூரி தான் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது அமீர் படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக, சூரியை இனி ஹீரோவாக மட்டுமே பார்க்கலாம் போல என்று சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளன்று அஜித்தின் 'வலிமை' திரையரங்குகளில்...

ABOUT THE AUTHOR

...view details