தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கடைசியாக வெங்கட் பிரபு வெளியிட்ட 'வலி'மை அப்டேட்! - வெங்கட்பிரபு வலிமை அப்டேட்

பிரதமர் மோடி முதல் மொய்ன் அலி வரை வலிமை அப்டேட்டை கேட்டு தல அஜித் ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு வலிமை அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Director venkat prabhu
இயக்குநர் வெங்கட்பிரபு

By

Published : Apr 7, 2021, 7:49 AM IST

சென்னை: வாக்களித்து ஐனநாயகக் கடைமை ஆற்றியதை தனது 'வலி'மை அப்டேட் எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 6) ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், தங்களது ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றியதை காலை முதலே ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திரைப் பிரபலங்கள் வெளிப்படுத்தி வந்தனர்.

கோலிவுட்டின் டாப் பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலரும் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது வாக்குப்பதிவை செய்துவிட்டு தன் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு, "என் 'வலி'மை அப்டேட். அனைவரும் உங்களது வாக்கினை பதிவு செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்" எனக் குறிப்பட்டுள்ளார். ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது வாக்குதான் வலிமையான ஆயுதம் என்பதைக் குறிப்பிடும் விதமாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர் மொய்ன் அலி வரை காண்போரிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டனர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு மீம்ஸ்களையும், நய்யாண்டி பதிவுகளையும் ஷேர் செய்தனர். ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பாளர் போனிகபூர், ரசிகர்களின் அட்ராசிட்டி பொறுக்க முடியாமல் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என அப்டேட் கொடுத்து ஆசுவாசப்படுபத்தினார்.

இருப்பினும் வலிமை அப்டேட்க்காக தீவிர வெயிட்டிங்கில் இருக்கும் தல ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் அப்டேட் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: சாதியைவிட மனிதம்தான் முக்கியம்- விஜய் சேதுபதி

ABOUT THE AUTHOR

...view details