தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'யுவன் ரெடி பண்ணிடாரு' - வலிமை அப்டேட் தந்த வெங்கட் பிரபு! - வலிமை இரண்டாவது சிங்கிள்

இயக்குநர் வெங்கட் பிரபு, வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அஜித்
அஜித்

By

Published : Aug 12, 2021, 7:10 AM IST

ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம், 'வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான, 'வேற மாறி' பாடல் யூ-ட்யூப் தளத்தில் சுமார் ஒரு கோடியே ஐந்து லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

அஜித்

இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

'யுவன் ரெடி பண்ணிடாரு... விரைவில் இரண்டாவது சிங்கிள் வெளியாகும். அதேபோல் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலும் வருகிறது' எனக் கூறினார்.

இதனைக் கேட்டு அஜித் ரசிகர்கள் #Valimai2ndsingle என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அன்பையும்... வெறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் - நடிகர் அஜித்

ABOUT THE AUTHOR

...view details