தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ப்ளூ சட்டை மாறன் சினிமாவுக்கு தேவையான தாதா' - இயக்குநர் வேலு பிரபாகரன்! - யூடியூப் விமர்சகர்

யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை பார்க்கும் போது ரவுடி குணம் கொண்ட குழந்தை மாதிரி தெரிகிறார் என ஆன்டி இண்டியன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

By

Published : Oct 9, 2021, 7:51 PM IST

சென்னை: மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் வேலு பிரபாகரன்

மாறனைப் பார்க்கும்போது ஒருபக்கம் ரவுடி குணம் கொண்ட குழந்தை மாதிரி தெரிகிறார். இன்னொரு பக்கம் உன்னதமான குணங்களைக் கொண்ட சினிமா தாதா போலத் தெரிகிறார்.

ஆன்டி இண்டியன் படக்குழு

ஆனால் இப்படி ஒரு தாதா சினிமாவுக்கு தேவைதான். அவர் எடுத்திருக்கும் படம் கூட இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் மதம் பற்றிய படம் தான். சமூக பொறுப்புடன் கூடிய இயக்குநர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்)

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். குப்பத்து கதாபாத்திரத்தில் பசி சத்யா அற்புதமாக நடித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்

இந்தப்படத்திற்கு முக்கிய தூணாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இடைவேளைக்குப் பின் பதினான்கு நிமிடங்கள் கொண்ட ஒரே காட்சியை ஒற்றை ஆளாகத் தாங்கிப்பிடித்து நடித்துள்ளார். இத்தனைக்கும் 60 பேர் காம்பினேஷன் கொண்ட அந்த காட்சியை, அவரது அற்புதமான நடிப்பால் ஒரே நாளில் படமாக்க முடிந்தது.

படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவைச் சென்று சந்தித்தபோது, “டே சாட்டை.. உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உன் படத்தைப் போடு.. நான் ஒரு ப்ளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு என்றார்.

ABOUT THE AUTHOR

...view details