தமிழ் சினிமாவில் 'ஆசை', 'நேருக்கு நேர்', 'ரிதம்', 'சத்தம் போடதே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்த் எஸ் சாய். இவர் தனது சொந்த தயாரிப்பில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமெளலி, காளிஸ்வரி, நடிகர் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி ராய். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.